கௌதம் அதானி-க்கு ராஜ யோகம் துவங்கியது.. மீண்டும் உலக டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இடம்

 ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாவதற்கு முன்பு கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்ரு 40 பில்லயன் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு ஆசியாவின் டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு வைத்து குற்றச்சாட்டுகளை விசாரிக்க செபிக்கு சுப்ரீம் கோர்டு உத்தரவிட்ட நிலையில், செபி-யின் விசாரணையின் போக்கை கண்காணிக்க சிறப்பு குழுவையும் நியமித்துள்ளது.